மேலும்

மாதம்: December 2014

மகிந்த ராஜபக்ச : தெற்கிலிருந்து தோற்றம் பெற்ற அளப்பரிய ஒரு அரசனின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா?

வழமையை விட இரண்டு ஆண்டுகள் முன்னதாக அதிபர் தேர்தலை நடாத்தவுள்ளதாகவும் இதனை ஜனவரி 08 அன்று நடாத்தவுள்ளதாகவும் அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த போது இவர் தான் வெற்றி பெறுவேன் என்கின்ற நம்பிக்கையைக் கொண்டிருந்திருப்பார்.

மகிந்தவா – மைத்திரியா ? – பல்கலைக்கழக கருத்துக்கணிப்புகளில் முரண்பாடு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று கொழும்பு பல்கலைக்கழகமும், மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று களனிப் பல்கலைக்கழகமும் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

பைசர் முஸ்தபாவும் பாய்ந்தார் மைத்திரி பக்கம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபாவும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பான் கீ மூன் மீது பாய்கிறது சிறிலங்கா அரசாங்கம்

அமைதியானதும், நம்பகமானதுமான தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடுமையாக கண்டித்துள்ளது.

பின்கதவுப் பேரம் மூலம் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது – இரா.சம்பந்தன்

தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினைக்கு பின்கதவுப் பேரம் மூலம் தீர்வு கண்டுவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் – மகிந்த தேசப்பிரிய

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் திட்டமிட்டபடி, அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று, சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஹக்கீம், ரிசாத்தை விடமாட்டேன் – கோத்தா ஆவேசம்

அரசாங்கத்தை விட்டு விலகிச் சென்ற ரவூப் ஹக்கீமையோ, ரிசாத் பதியுதீனையோ, மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்குத் தான் விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் – இரா.சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன்  எழுத்துபூர்வ உடன்பாடு எதுவும் செய்து கொள்ளவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தனக்கு 35 வீத வாக்குகள் கிடைக்குமாம் – மகிந்தவின் நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில் இந்தமுறை தனக்கு 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

அசோக வடிகமங்காவவும், மைத்திரியுடன் இணைந்தார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாணசபை உறுப்பினரான அசோக வடிகமங்காவ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேவுடன் இணைந்து கொண்டுள்ளார்.