மேலும்

நாள்: 4th November 2014

‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’*

கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம்.

கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி மாவட்டம் கிடையாது – சிறிலங்கா அரசு அறிவிப்பு

கிழக்கில் முஸ்லிம்களுக்குத் தனி மாவட்டத்தை அமைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் குழுவுக்கு எந்த உரிமையும் இல்லை – சிறிலங்கா கூறுகிறது

சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் குழு அண்மையில் விடுத்திருந்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அநாதரவான பிள்ளைகளுக்கு கல்வி வசதி செய்து கொடுக்கத் தயார் – மீரியபெத்தவில் முதல்வர் விக்னேஸ்வரன்

பாரிய மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பதுளை,  மீரியபெத்த பிரதேசத்துக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதுடன், அனாதரவாக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கல்வி வழங்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“கூட்டமைப்பைக் கொச்சைப்படுத்த வேண்டாம்” – மத்திய மாகாணசபை உறுப்பினர் ராஜாராம்

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கில் காணிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வுபூர்வமாக வெளியிட்ட கருத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்  என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.

பயணத்தடையை நீக்க கூட்டமைப்பும் வடமாகாணசபையும் முயற்சிக்கவில்லை – யாழ்.ஆயர் குற்றச்சாட்டு

வடபகுதிக்கு வெளிநாட்டவர்களும், புலம்பெயர் தமிழர்களும் பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று யாழ். ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம் குற்றம்சாட்டியுள்ளார்.

சீன நீர்மூழ்கி விவகாரம்: மகிந்தவின் உள்நோக்கம் குறித்து இந்தியா பெரும் கவலை

சீன நீர்மூழ்கி மீண்டும் கொழும்பு வந்துள்ளது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உள்நோக்கம் குறித்து இந்திய அரசாங்கத்துக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

சீன நீர்மூழ்கிகளால் இந்தியா சினங்கொள்ளவில்லை – என்கிறது சிறிலங்கா

சிறிலங்கா கடற்பரப்பில் சீன நீர்மூழ்கிகள் நடமாடுவது தொடர்பாக, இந்தியாவுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்று சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

பாப்பரசரின் பயணத்துக்கு முழு ஒத்துழைப்பு – வத்திக்கானுக்கு சிறிலங்கா வாக்குறுதி

பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக, வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவிடம், சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.