மேலும்

நாள்: 24th November 2014

திலிப் சின்காவின் பதவிக்காலம் முடிகிறது – சிறிலங்காவைக் காப்பாற்ற வரப்போகும் புதியவர் யார்?

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நீர்த்துப் போகும் வகையில் திருத்தங்களைச் செய்வதில் முக்கிய பங்காற்றிய, இந்திய இராஜதந்திரியான திலிப் சின்காவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

பாப்பரசரின் படங்களை அகற்றுங்கள் – அரசியல் கட்சிகளுக்கு கத்தோலிக்கத் திருச்சபை கண்டிப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு பாப்பரசர் பிரான்சிசின் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று சிறிலங்கா கத்தோலிக்கத் திருச்சபை , அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மலேசியாவில் தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் அகதிகளும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும்

அகதி நிலையை உறுதிப்படுத்தும் அட்டைகளை வைத்திருந்த போதிலும் இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் என குற்றம் சுமத்தப்பட்டு இந்த ஆண்டில் சிலர் மலேசியாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழலானது மலேசியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மேலும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது.

95 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவு செலவுத் திட்டம் – எதிர்பார்ப்புகள் பொய்யாகின

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால்  சமர்ப்பிக்கப்பட்ட 2015ம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அரசதரப்புக்குப் தாவமாட்டோம் – திஸ்ஸ உள்ளிட்ட 3 ஐதேக பிரமுகர்களும் அறிவிப்பு

ஆளும்கட்சியில் தாம் இணைந்து கொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க மறுத்துள்ளார்.

இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைகளின் மூன்று வார கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைப்பிரிவுகள் இணைந்து நடத்திய மூன்று வாரகால கூட்டுப் போர்ப்பயிற்சி நேற்று அம்பாந்தோட்டையில் நிறைவடைந்தது.

தமிழீழத்தை வழங்குவதாக மேற்குலகுடன் எதிரணி இரகசிய உடன்பாடு – சிறிலங்கா அரசு குற்றச்சாட்டு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து எதிரணியினர் கூட்டு திட்டம் தீட்டியிருப்பது, அல்ஜசீரா தொலைக்காட்சிக் கலந்துரையாடல் மூலம் அம்பலமாகியுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

தோல்வியுற்றால் மகிந்த மீது போர்க்குற்ற விசாரணை – அல்ஜசீரா விவாதத்தில் கருத்து

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினால், போர்க்குற்றச்சாட்டுகளுக்காக, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று உலகத் தமிழர் பேரவையின் மூலோபாய முயற்சிகளுக்கான பணிப்பாளர் சுரேன் சுரேந்திரா தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்யும் கூட்டணிக் கட்சிகள்

சிறிலங்காவில் வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக எதிரணி அறிவித்துள்ள நிலையில், ஆளும்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மகிந்த ராஜபக்சவை ஆதரிக்கும் தமது முன்னைய முடிவுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இன்று மாலை 5 மணி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பெருமெடுப்பிலான கட்சித் தாவல் இடம்பெறலாம் என்று ஊடகங்கள் வெளியாகியுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இறுதி வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.