மேலும்

Archives

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு தொடங்கியது – முன்வரிசையில் சம்பந்தன், சுமந்திரன்

இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு கொழும்பில் சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ செயலகமான அலரி மாளிகையில் இன்று மாலை ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கில், பங்கேற்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், இன்று பிற்பகல் தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – சம்பந்தன்

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை சிறிலங்காவில்  முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்த அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர்

தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் காணாமல் சிறிலங்காவில் ஆக்கப்பட்டவர்களுக்காக, நினைவு தீபம் ஏற்றினார்.

சிறிலங்காவில் தமிழ் அச்சு இதழ்களின் விற்பனை வீழ்ச்சி – சிங்கள, ஆங்கில இதழ்கள் அதிகரிப்பு

சிறிலங்காவில், சிங்கள மற்றும் ஆங்கில நாளிதழ்கள், வாரஇதழ்கள் போன்றவற்றின் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், தமிழ், நாளிதழ்கள், வாரஇதழ்களின் விற்பனை கணிசமாக வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாள் – வடக்கு, கிழக்கில் போராட்டங்கள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அனைத்துலக நாளை முன்னிட்டு, வடக்கிலும், கிழக்கிலும் இன்று பல்வேறு இடங்களிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மென்சக்தியையும் வன்சக்தியையும் கையாளும் சீனாவின் கடற்படை இராஜதந்திரம்

சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பலான Peace Ark  தற்போது தனது ஆறாவது  ‘நல்லிணக்கப் பணியை’ அபிவிருத்தியடைந்து வரும் சில நாடுகளில் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தப் பணியின் மூலம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வாழும் மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை சீனக் கடற்படையின் மருத்துவக் குழுவினர் வழங்கி வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் சென்ற வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்து நாசம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் பயணம் செய்த வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இப்போது தூதுவர் இல்லை – பிரேசிலில் உள்ள சிறிலங்கா தூதரகம்

சிறிலங்கா தூதுவராக இருந்த ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்துள்ள, போர்க்குற்ற வழக்குத் தொடர்பாக கருத்து வெளியிட, பிரேசிலில் உள்ள சிறிலங்கா தூதுரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

போர்க்குற்ற வழக்கை எதிர்கொண்டுள்ள ஜெனரல் ஜெகத் ஜயசூரிய எங்கே?

பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளில் போர்க்குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா தூதுவர் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, பிரேசிலை விட்டு வெளியேறி விட்டதாக, ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.