திருகோணமலையில் ஜப்பானிய போர்க்கப்பல்
ஜப்பானியக் கடற்படையான கடல்சார் தற்காப்புப் படையின், போர்க்கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
ஜப்பானியக் கடற்படையான கடல்சார் தற்காப்புப் படையின், போர்க்கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அங்குள்ள தேவைகள் குறித்து ஆராய்ந்து தகவல்களைத் திரட்டுவதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், தமது நாட்டின் குழுவொன்றை அனுப்பவுள்ளதாக மலேசியப் பிரதமர் அப்துல் நஜீப் ரசாக் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியில் புளொட் மூத்த உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து, துப்பாக்கிகள், ரவைகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் ரசாக் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இராணுவப் பயிற்சி, புலனாய்வுப் பரிமாற்றங்கள், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு மலேசியப் பிரதமரும், சிறிலங்கா அதிபரும் இணக்கம் கண்டுள்ளனர்.
சிறிலங்காவில் ‘ஒப்பரேசன் பவான்’ நடவடிக்கைக்காக இந்தியப் படையினர் பயன்படுத்திய ரஷ்ய தயாரிப்பான எம்.ஐ.-8 உலங்குவானூர்திகள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
50 சீன இணையர்களுக்கு நேற்று கொழும்பு நகரசபை மைதானத்தில் பிரமாண்ட திருமண விழா இடம்பெற்றது. சிறிலங்கா அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த திருமணவிழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மலேசியப் பிரதமர் அப்துல் நஜீப் ரசாக் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று காலை சிறிலங்காவை வந்தடைந்தார். சிறப்பு விமானம் மூலம், மலேசியப் பிரதமர் இன்று காலை 8.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சிறிலங்காவில் தன்னிச்சையான தடுத்துவைப்புகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று, ஐ.நா நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைப்புகள் குறித்த ஐ.நா பணிக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் சிறிலங்காவில் மேற்கொண்ட 12 நாட்கள் பயணத்தின் முடிவில் கொழும்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம இன்று உள்ளூராட்சி, மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.