நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை ஜனவரி 3 இல் வெளியாகிறது
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கை எதிர்வரும் 2017 ஜனவரி 03ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வுச் செயலணியின் அறிக்கை எதிர்வரும் 2017 ஜனவரி 03ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வெளியான ஆரூடங்களை அடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியதால், பிரித்தானிய ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக்கினால், தேசியத் துரோகிகள் என்று பிரகடனம் செய்யப்பட்ட, கெப்பிட்டிபொல திசாவே உள்ளிட்ட 19 பேரும், தேசதுரோக குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தைப் பலவீனப்படுத்துவதற்குத் தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று சூளுரைத்துள்ளார்.
மனித உரிமை குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்காவை விடுவிக்குமாறு, அமெரிக்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் பயணமாக மலேசியாவுக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த மாதம் 14ஆம் நாள், சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பையே அறிமுகப்படுத்துமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறிலங்கா கடற்படை ஆண்டுதோறும் நடத்தும் அனைத்துலக கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான, ‘காலி கலந்துரையாடல்-2016’ , வரும் 28ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்காவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது, எத்தகைய இராணுவப் புரட்சி முயற்சிகளையும் முறியடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பான செயலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் நாள் தொடக்கம் செயற்படத் தொடங்கும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.