மைத்திரியின் பதவிக்காலம் குறித்து முடிவெடுக்க 5 நீதியரசர்களைக் கொண்ட குழு நியமனம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக முடிவு செய்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் தொடர்பாக முடிவு செய்வதற்காக, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கச் செயல்முறைகளுக்கு சிறிலங்காவுக்கு முழுமையான ஆதரவை ஜப்பான் வழங்கும் என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ, தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு எதிரணி இணைந்து போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு, சட்டமா அதிபர் அனுமதி அளித்துள்ள நிலையில், அவர் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு யுத்த மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக தற்போது மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதி நிகழ்ச்சித் திட்டத்தால் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவிற்கு எதிராக – இவர் தூதுவராகக் கடமையாற்றிய பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியை மீண்டும் இணைய வைப்பதில் வெளிநாட்டு சக்தி ஒன்று, அழுத்தங்களைக் கொடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், புதிய பிரதி அமைச்சர்கள், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனியாகப் பேச்சு நடத்தவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது. எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, வடக்கு மாகாணத்தின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.