அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் பாரிய கட்சித் தாவல்?
சிறிலங்கா அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கட்சி தாவவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கட்சி தாவவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவுக்குள் நுழைந்து சிறிலங்கா காவல்துறையினர் தேடுதல்களை நடத்தியுள்ளனர்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை, சிறிலங்கா அரசாங்கத்துக்கு நெருக்கமான பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் எதிரணியினர் வெற்றி பெற்றால், சிறிலங்கா மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசான தனக்கு ஆதரவளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ்மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அடுத்தவாரம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் பயமுறுத்தும், நடவடிக்கைக்கு சிறிலங்கா இராணுவத்தை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்துவதாக அனைத்துலக சமூகத்திடம் முறையிட்டுள்ளது எதிரணி.
யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை, “திரு.பிரபாகரன்” (மிஸ்டர் பிரபாகரன்) என்று குறிப்பிட்டது, அரசதரப்புக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து மேலும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விலகிக் கொள்ளவுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் என்று கொழும்பு பல்கலைக்கழகமும், மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என்று களனிப் பல்கலைக்கழகமும் நடத்திய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் இந்தமுறை தனக்கு 35 வீதமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.