களைகட்டாத மகிந்தவின் கடைசிப் பரப்புரை மேடை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு கஸ்பேவவில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு கஸ்பேவவில் இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றால், பொதுமக்களுடன் இணைந்து ஜேவிபி அதற்கெதிராக போராடும் என்று ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வடமாகாண சபையை முடக்கப் பார்த்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தான் சிறிலங்காவை விட்டுத் தப்பி ஓடமாட்டேன் என்றும், தொடர்ந்து நாட்டிலேயே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை, மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைத்துள்ளார் என்று, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல் முடிந்தவுடன், வரும் 8ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அரசாங்க வானொலியில் செய்யப்பட்ட தரக்குறைவான பரப்புரைக்காக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மன்னிப்புக் கோரியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.