மேலும்

Tag Archives: பலாலி

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – மகிந்த அணி கொந்தளிப்பு

மத்தல அனைத்துலக விமான நிலையத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சிக்கும் அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது ஏன் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

பலாலியில் இருந்து அவுஸ்ரேலியா, ஐரோப்பா வரை விமான சேவை

பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காங்கேசன் துறைமுக அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி – காணிகளும் சுவீகரிப்பு

வடக்கின் வணிகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில்,  காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது.

பலாலி விமான நிலைய, காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டங்கள் 15ஆம் நாள் ஆரம்பம்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்வரும், 15ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

1.95 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம்

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான  திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – சிறிலங்கா அரசுடன் கூட்டமைப்பு பேச்சு

சிறிலங்கா விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது.

பலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளது.

அரசியல் உறுதியற்ற நிலையால் பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் இழுபறி

சிறிலங்காவின் அரசியல் உறுதியற்ற நிலையினால், இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம், தாமதமடைந்துள்ளது என்று இந்திய விமானத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பலாலி, மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு விமான சேவை – இந்தியா அக்கறை

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும், பலாலி மற்றும், மட்டக்களப்பில் இருந்து தென்னிந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளை நடத்துவதற்கும், உதவி அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் – இன்று அமைச்சரவையில்

பலாலி விமான நிலையத்தை, சிறிலங்கா விமானப்படையும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலர் விதானகமகே தெரிவித்துள்ளார்.