மேலும்

வலி.வடக்கு காணி உரிமையாளர்கள் பலாலியில் இன்றும் போராட்டம்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது  காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

1990ஆம் ஆண்டு முதல இடம்பெயர்ந்த நிலையில் உள்ள காணி உரிமையாளர்கள், தமது காணிகளை விடுவிக்கக் கோரி நடத்திய போராட்டங்கள் பலனளிக்காத நிலையில் கடந்த ஏழு வாரங்களாக வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பலாலியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் தளபதிகள் மாளிகைக்கு முன்பாக, இன்று காலை முதல் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

இதில் காணி உரிமையாளர்கள் பெருமளவில் கலந்து கொண்ட நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் அங்கு சென்று ஆதரவு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *