பலாலி விமான நிலையத்தில் பயணிகள் முனையத்துக்கு அடிக்கல்
பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
சுமார் 700 மில்லியன் ரூபா செலவில் பயணிகள் முனையத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளைத் தொடங்கும் வகையில் நேற்று மத வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் சைவ, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருமார். விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதேவேளை, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் மூன்றாவது முறையாக வாடகை விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.
மலேசியாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் நேற்று மதியம் எரிபொருள் நிரப்புவதற்காகவும், விமானி ஓய்வெடுப்பதற்காகவும் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானம் இன்று புறப்பட்டுச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




