பலாலியில் நிவாரணப் பொருட்களுடன் தரையிறங்கியது அமெரிக்க விமானம்
அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று உதவிப் பொருட்களுடன் இன்று காலை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
சிறிலங்காவில் அண்மைய பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இந்த விமானம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் கட்டளைப் பீடத்தின் இரண்டு விமானங்கள், சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
இன்று அந்த விமானங்களில் ஒன்று யாழ்ப்பாணத்தில் உதவிப் பொருட்களை தரையிறக்கியுள்ளது.




