மேலும்

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் ராவய ஆசிரியர்

மகிந்த ராஜபக்சவை விடவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று செய்தி வெளியிட்ட ராவய சிங்கள வாரஇதழின் ஆசிரியர் கே.டபிள்யூ.ஜனரஞ்சன, சிறிலங்கா காவல்துறை குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்டே மகிந்தவுடன் கைகுலுக்கவில்லை – காரணத்தை விபரிக்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபருடன் கைகுலுக்கி தனது கைகளில் கறையை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாததால் தான், நேற்று அவர் கைகுலுக்க முயன்றபோது அதனைத் தவிர்த்துக் கொண்டதாக கூறியுள்ளார் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன.

மகிந்த, மைத்திரி குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்கள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிழ்ச்சி கொள்ளவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கண்ணிவெடி வயல்களில் இப்போது ஆரம்ப பாடசாலைகள் – ஜோன் கெரி

சிறிலங்காவில் கண்ணிவெடி வயல்களில் இப்போது ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிக்க முடிந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

ஹெல உறுமயவுக்குள் பிளவு – ஒரு பகுதி மகிந்தவுக்கு ஆதரவு

ஜாதிக ஹெல உறுமயவின் ஒரு பகுதி பௌத்த பிக்குகள், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று திருப்பதி செல்கிறார் மகிந்த – பாதுகாப்பு கெடுபிடிகளால் தமிழர்கள் திணறல்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இரண்டு நாள் பயணமாக இன்று மாலை திருப்பதிக்குச் செல்லவுள்ள நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“மகிந்தவுக்கு பிடித்துள்ளது பண்டா போபியா” – சந்திரிகா கிண்டல்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தற்போது பண்டாரநாயக்க போபியா (பயம்) வினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் செயலக அறிக்கையை மறுக்கிறது ரிசாத் பதியுதீன் கட்சி – இன்னமும் முடிவு செய்யவில்லையாம்

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக, அதிபர் செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது என்றும், தாம் இதுபற்றி இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் வை.எல்.எஸ்.ஹமீத் தெரிவித்தார்.

சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்துகிறார் மைத்திரிபால

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனது சொத்துகள் பற்றிய விபரங்களை எவரேனும் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

எதிரணிக்குப் பாய்ந்தார் ஹிருணிகா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, எதிரணியுடன் இணைந்து, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.