மேலும்

நாள்: 4th September 2026

பதிலளிக்கும் வாய்ப்பு மறுப்பு -எழுத்துமூல பதிலளிப்பை தவிர்த்தது சட்டவாளர் சங்கம்

உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் வாய்மொழி வாதங்களுக்குப் பதிலளிக்கும் வாய்ப்பு  மனுதாரர்களுக்கு மறுக்கப்பட்டதால் 22வது திருத்தச்சட்டமூலம் தொடர்பான எழுத்துமூலப் பதில்களை அளிக்கப் போவதில்லை என சிறிலங்கா சட்டவாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதிகாரப்பகிர்வு, பொறுப்புக்கூறல், சிறப்பு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தும் ஐ.நா அறிக்கை

அதிகாரப்பகிர்வு, நம்பகமான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு, சுதந்திரமான சிறப்பு சட்டவாளருடன் கூடிய சிறப்பு நீதிப் பொறிமுறை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய வேண்டும் என சிறிலங்காவிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா நல்லிணக்க, பொறுப்புக்கூறல் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும்- ஐ.நா

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்துதலை முன்னெடுக்கவும் சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.

இருதரப்புத் திட்டங்கள் குறித்து மகாநாயக்கர்களுக்கு தெளிவுபடுத்தினார் இந்திய தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர்  சந்தோஷ் ஜா, மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும்  இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு, ஆசிகளைப் பெற்றுள்ளார்.