மேலும்

சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்துகிறார் மைத்திரிபால

maithripala sirisenaஎதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனது சொத்துகள் பற்றிய விபரங்களை எவரேனும் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று பிற்பகல் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து தெரிவித்த அவர்,

தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள எனது சொத்துக்கள் பற்றிய தகவல்களை எவரேனும் தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்களின் கண்களில் இருந்து இந்த ஆவணம் மறைக்கப்படுவதே வழக்கம்.ஆனால், மக்கள் இதனைப் பார்வையிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அத்துடன் பயன்படுத்தாத எரிபொருள் அனுமதிப்பத்திரங்களையும் நான் மீளக் கையளிக்கிறேன்.

சுகாதார அமைச்சராக இருந்த போது எனது அதிகாரபூர்வ வாகனப் பயணங்களுக்காக வழங்கப்பட்ட, இந்த எரிபொருள் அனுமதிப்பத்திரங்களின் மதிப்பு பத்து இலட்சத்து 30 ஆயிரம் ரூபா.

ஒவ்வொரு ஆண்டும் நான் பயன்படுத்தாத எரிபொருள் அனுமதிப்பத்திரங்களை அமைச்சிடம் மீளக் கையளித்து விடுவது வழக்கம்.

அமைச்சருக்குரிய பணிகளை ஆற்றச் செல்லும் போது மட்டுமே, இவற்றை நான் பயன்படுத்துவேன்.

பயன்படுத்தாத இந்த அனுமதிப்பத்திரங்களை விற்று என்னால் 10 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொண்டிருக்க முடியும். ஆனால் நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.

அரசாங்க சொத்துக்களை சிறிலங்கா அதிபர் தனது பரப்புரைகளுக்காக தவறாகப் பயன்படுத்துகிறார்.

சிறிலங்கா அதிபர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கூறினர்.

தற்போது அவர் மோசடியான முறையில், அரச வளங்களையும், அரச பணியாளர்களையும் பயன்படுத்தி வெற்றி பெற முயற்சிக்கிறார்.

எவ்வாறாயினும் நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

ஏனென்றால் மக்களின் சக்தி, பணம் மற்றும் அதிகாரத்தை விட மேலானது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *