மேலும்

நாள்: 3rd September 2026

கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய 463 கிலோ ஐஸ்- அமெரிக்காவே தகவல் வழங்கியது

அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவலின் மூலமே, கொழும்பு துறைமுகத்தில் 463 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய காவல்படைப் பிரிவுடன் கூடுதல் ஒத்துழைப்பை கோரும் சிறிலங்கா

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா, அமெரிக்காவின் தேசிய காவல் பிரிவின் தலைவர், ஜெனரல் ஸ்டீவன் நோர்டாஸ் (Chief of the National Guard Bureau of the United States, General Steven Nordhaus) உடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்ய முடிவு

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற, ஆளுகை, நீதி மற்றும் பொமக்கள் பாதுகாப்புக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தீர்மானித்துள்ளது.

மிக் போர் விமான கொள்வனவு மோசடி- விமானப்படை அதிகாரிகளிடம் புதிய விசாரணை

15 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் 8 மிக் போர் விமானங்களை சர்ச்சைக்குரிய வகையில் கொள்முதல் செய்து, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக குறித்து, சிறிலங்கா விமானப்படையின் தொழில்நுட்ப மற்றும் கொள்முதல் குழுவிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

22ஐ நிறைவேற்ற பொதுவாக்கெடுப்பு தேவையில்லை – சட்டமா அதிபர் வாதம்

முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தத்தை பொதுவாக்கெடுப்பு நடத்தாமலேயே , நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று, சட்டமா அதிபரும், பல குறுக்கீட்டு மனுதாரர்களும், உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.