சிவில் அதிகாரியின் கையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு
சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக, பி.எம்.யு.டி.பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக, பி.எம்.யு.டி.பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம் போலல்லாது சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது நாட்டில் இடம்பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மிகத் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
கொழும்பில் நேற்று மாலை நடந்த புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்துக் கூறியுள்ள, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள், மனித உரிமைகள் விவகாரத்தில் புதிய அரசாங்கம் தொடர்பான தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளன.
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்றில், மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, கொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள புலனாய்வு அதிகாரிகள் விழப்பு நிலையில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்குப் பகுதிகளும், மலையகமுமே அதிபர் தேர்தலில் தன்னைத் தோற்கடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.
சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும், இன்று மாலை 6.21 மணியளவில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து இன்று காலையில் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய மகிந்த ராஜபக்ச, தனது சொந்த ஊரான மெதமுலானவுக்குச் சென்றுள்ளார்.
சிறிலங்காவின் புதிய அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், புதிய அரசாங்கம் சீனாவுடன் நட்புரீதியான கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.