புதுடெல்லிக்குப் புறப்பட்டார் மைத்திரிபால சிறிசேன
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் 2 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்திய மாக்கடலின் கரையோரம் முழுவதிலும் பாதுகாப்பான வலைப்பின்னலை உருவாக்கும் நோக்குடன் சீனாவால் மேற்கொள்ளப்படும் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கமானது தனது ஒப்புதலை வழங்கியதானது அதிர்ச்சியளிக்கும் விடயமாகும்.
நான்கு நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கன் விமான சேவையின், பயணிகள் விமானம் மூலமே, மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி செல்லவுள்ளார்.
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையின் அறிக்கை, ஏற்கனவே திட்டமிட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பிரதான பொருளாதாரப் பங்காளராக அமெரிக்கா மாறியிருப்பதாகவும், சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்ட பத்து சிறிலங்கா இராணுவ அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க தமது அரசாங்கம் தயக்கம் காட்டாது என்று, வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பொருத்தமான நேரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகி தெரிவித்துள்ளார்.