கதிகலங்கிப் போனது கட்டுநாயக்க விமான நிலையம்
கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையப் பணியாளர்கள் இன்று காலை நடத்திய திடீர் பணிநிறுத்தப் போராட்டத்தினால், சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையப் பணியாளர்கள் இன்று காலை நடத்திய திடீர் பணிநிறுத்தப் போராட்டத்தினால், சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார், சிறிலங்காவின் தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர.
சிறிலங்கா நீதிமன்றத்தினால், தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவருக்கு அண்மையில், விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை குறித்து, இந்திய மக்களின் உணர்வுகளை சிறிலங்காவிடம் இந்தியா தெரியப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில், வரவுசெலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் நடந்து வரும் நிலையில், வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டுப் பிரேரணையில் சிறிலங்கா அரசாங்கம் நேற்று திருத்தங்களை முன்வைத்துள்ளது.
சிறிலங்காவின் 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு, நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.
கிழக்கில் முஸ்லிம்களுக்குத் தனி மாவட்டத்தை அமைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சிறிலங்கா அரசியலமைப்பின் 18வது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் குழு அண்மையில் விடுத்திருந்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பாரிய மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்ற பதுளை, மீரியபெத்த பிரதேசத்துக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதுடன், அனாதரவாக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கல்வி வழங்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கில் காணிகளை வழங்கத் தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்வுபூர்வமாக வெளியிட்ட கருத்தை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.
வடபகுதிக்கு வெளிநாட்டவர்களும், புலம்பெயர் தமிழர்களும் பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று யாழ். ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம் குற்றம்சாட்டியுள்ளார்.