மேலும்

பயணத்தடையை நீக்க கூட்டமைப்பும் வடமாகாணசபையும் முயற்சிக்கவில்லை – யாழ்.ஆயர் குற்றச்சாட்டு

வடபகுதிக்கு வெளிநாட்டவர்களும், புலம்பெயர் தமிழர்களும் பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று யாழ். ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம் குற்றம்சாட்டியுள்ளார்.

தமது உறவினர்களைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் மக்கள், நாட்டைப் பிளவுபடுத்தி விடுவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கம் காலத்துக்குக் காலம் இதுபோன்ற தற்காலிக கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளும் இந்த நடைமுறைகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதிகாரிகளுடன் இந்த விவகாரம் குறித்து மதகுருமார் பேச முடியாது.

மக்கள் தமது உறவினர்களைப் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கட்டுப்பாடுகள் தேவையற்றவை.

தமது சுதந்திரத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு மக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் முயற்சிக்க வேண்டும்.

இதனைச் செய்ய முடியும், அதுவரை உள்ளூராட்சி, உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைந்து செயற்பட வேண்டும்.

இதன் பொருளாதாரத் தாக்கம் அளவிடமுடியாதது.  நான் ஒரு அரசியல்வாதி அல்ல. என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *