மேலும்

பிரிவு: செய்திகள்

வீணை சின்னத்திலேயே போட்டி – ஈபிடிபி முடிவு

ஆளும் பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான ஈபிடிபி வடக்கு, கிழக்கில் சொந்தச் சின்னத்திவேயே போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

வடக்கில் மதவாத சுவரொட்டிகள் – தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு

வடக்கில் மதவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளமை குறித்து, சுதந்திரமான, நீதியான தேர்தல்களுக்கான அமைப்பான கபே, தேசிய தேர்தல்கள் ஆணையத்திடம், முறைப்பாடு செய்துள்ளது.

மீன் சின்னத்தில் களமிறக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, வரும் பொதுத் தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு விரைவில் பொதுமன்னிப்பு?

மிருசுவிலில் எட்டு தமிழ்ப் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யவுள்ளார் என்று இரண்டு கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எந்த நேரத்திலும் கைதாவார் ரவி கருணாநாயக்க

சிறிலங்காவின் முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்க எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் அரசியல்வாதியை கொல்லச் சதி? – வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு

வடக்கில் உள்ள முக்கிய தமிழ் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகளின் ஆறு முக்கிய முன்னாள் போராளிகள் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

10 நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட சீனா

சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் 10 முன்னணி நாடுகளின் வரிசையில் இருந்து. 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனா முதல் முறையாக வெளியேற்றப்பட்டுள்ளது.

சீனாவிடம் 2 பில்லியன் டொலர் கடன் கேட்கும் சிறிலங்கா

சீனாவிடம் இருந்து சுமார் 2 பில்லியன் டொலர் வரை கடனைப் பெற்றுக் கொள்வது குறித்து சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தி வருவதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் மூத்த பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகிறார்  சிறிவஸ்தவா 

கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்னர் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரியாக பணியாற்றிய அனுராக் சிறிவஸ்தவா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளார்.

வேட்புமனுவில் பிக்குகளுக்கு இடமளிக்கக் கூடாது – அஸ்கிரிய மகாநாயக்கர்

பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் அரசியல் பதவிகளைக் கோருவதை தடுக்க தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர், வண. வரககொட ஞானரதன தேரர் வலியுறுத்தியுள்ளார்.