இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராகிறார் சிறிவஸ்தவா
கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்னர் அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரியாக பணியாற்றிய அனுராக் சிறிவஸ்தவா, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக உள்ள ரவீஷ் குமார், விரைவில் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எதியோப்பியாவுக்கான இந்திய தூதுவராகப் பணியாற்றும் அனுராக் சிறிவஸ்தவா, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளார்.
இவர், முன்னர் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கான பிரிவின் அதிகாரியாக பணியாற்றியவராவார்.