மீன் சின்னத்தில் களமிறக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, வரும் பொதுத் தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, மீன் சின்னத்தை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எதற்காக தெரிவு செய்தது என்பதை விளக்கி, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தினால் ஒதுக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றாக இருந்த, மீன் சின்னத்தை தெரிவு செய்தமைக்கான காரணங்களை அவர் விபரித்துள்ளார்.
முன்னதாக, தமிழ் மக்கள் கூட்டணி பானைச் சின்னத்தை தெரிவு செய்திருந்தது. எனினும், தற்போது மீன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.