மட்டக்களப்பு மாவட்டத்தைக் கைப்பற்றியது கூட்டமைப்பு – 3 ஆசனங்களில் வெற்றி
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 33,834 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாமல் ராஜபக்சவும், ஐதேக சார்பில் சஜித் பிரேமதாசவும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் விருப்பு வாக்குகளை எண்ணும் பணி நிறைவுக்கு வந்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில், ஐதேக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ள போதிலும், முக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே கூடுதலான ஆசனங்களுடன் இன்னமும் முன்னிலை வகிக்கிறது.
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில், திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை தொகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், கல்முனை,சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளை ஐதேகவும் கைப்பற்றியுள்ளன.
யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஈபிடிபி மற்றும் ஐதேக ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் மாவட்ட ரீதியாக கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதுவரை வெளியாகியுள்ள மாவட்ட முடிவுகளின் படி ஐ.ம.சு.மு 83 ஆசனங்களையும், ஐதேக 92 ஆசனங்களையும், ஜேவிபி 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடத்தப்பட்ட தேர்தலில், இதுவரையில் யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, மாத்தறை, பொலன்னறுவ ஆகிய மூன்று மாவட்டங்களின் அனைத்து தொகுதிகளுக்குமான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.