இன்று பகிரங்கமாக வெளியிடப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை?
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரில் சென்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதும், எவரது பெயரும் அதில் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை தொடர்பாக பதிலளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐந்து நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், கவிஞருமான கி.பி.அரவிந்தன் பற்றிய நினைவுப் பதிவுகளின் தொகுப்பான – ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ – நூல் அறிமுக நிகழ்வு நாளை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரி-56 துப்பாக்கியை, கொலையாளிகளுக்கு சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி வழங்கியது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை இந்தியாவின் மோடி அரசாங்கம் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது என்றும், சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும், அவர் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாக, அவருடன் தாம் நேரில் கலந்துரையாடவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரவுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.