மேலும்

ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சம்பந்தன் அவசர கடிதம் – ஜெனிவாவில் சந்திக்கவும் திட்டம்

sampanthanபோர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரில் சென்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

போர்க்குற்ற விசாரணை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உதவும் வகையில் இருக்காது என்பது நேற்று தெளிவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்புவதற்கான கடிதம் ஒன்றை வரையும் பணியில் நேற்று தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தில், ஐ.நா மனித உரிமை ஆணையாளரை ஜெனிவாவில் சந்திப்பதற்கான விருப்பத்தை வெளியிடவுள்ளார்.

அனைத்துலக விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ஆதரவைப் பெற வேண்டிய தேவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *