மேலும்

திருகோணமலையில் நாளை ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ நூல் அறிமுக நிகழ்வு

ki-pi-bookஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், எழுத்தாளரும், கவிஞருமான கி.பி.அரவிந்தன் பற்றிய நினைவுப் பதிவுகளின் தொகுப்பான – ‘சொல் யாராக இருக்கலாம் நான்’ – நூல் அறிமுக நிகழ்வு நாளை திருகோணமலையில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலை Jesuits Academy மண்டபத்தில் நாளை பிற்பகல் 4 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

பாலசுகுமார் தொகுத்திருக்கும் இந்த நூலின் அறிமுக நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திருகோணமலை “அறிவோர் அரங்கம்“ மேற்கொண்டுள்ளது.

அரசியல் ஆய்வாளர் யதீந்திராவின் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர் கு.சுரேஸ் தொடக்கவுரையையும், இளம் கவிஞர் தில்லைநாதன் பவித்திரன் அறிமுக உரையையும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் சிறப்புரையும் ஆற்றவுள்ளனர்.

ki-pi-book

ஏற்கனவே இந்த நூல் அறிமுக நிகழ்வு மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *