மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை எதிர்க்கவில்லை – என்கிறார் விக்னேஸ்வரன்

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்துக்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதற்கு முழுமையாக இணங்குவதாகவும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

மகிந்த ஆட்சிக்கால ஊழல்களை விசாரிக்கும் ஆணைக்குழுவின் செயலர் திடீரென பதவி நீக்கம்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் செயலர் பதவியில் இருந்து லசிலி டி சில்வா திடீரென நீக்கப்பட்டுள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் நேற்று இந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மறைந்து கிடந்த மகிந்த அரசு பெற்ற 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் – ஒரு ஆண்டுக்குப் பின் அம்பலம்

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட மேலும் 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கத் தயாராகிறதாம் சிறிலங்கா இராணுவம்

சிறையில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் மகிந்த அணியினரை ஓரம்கட்டும் மைத்திரி – 26 புதிய அமைப்பாளர்கள் நியமனம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த அமைப்பாளர்களை அதிரடியாக நீக்கியுள்ள, கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான மைத்திரிபால சிறிசேன, புதிதாக 26 மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை நியமித்துள்ளார்.

வடக்கு,கிழக்கில் சமஸ்டித் தீர்வை உருவாக்க இந்தியா தலையிட வேண்டும் – விக்னேஸ்வரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமஸ்டி ஆட்சிமுறையை உருவாக்க இந்தியா தலையீடு செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளகப் பொறிமுறை சிறிலங்கா இராணுவத்தை இலக்கு வைக்காது – ருவான் விஜேவர்த்தன

சிறிலங்கா இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றாலும் அது  எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை இலக்குவைக்கும் பொறிமுறையாக இருக்காது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் பொதுச்செயலர் விஸ்வ வர்ணபால காலமானார்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர்  விஸ்வ வர்ணபால இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79 ஆகும்.

ராஜித சேனாரத்னவைப் பார்வையிட சிங்கப்பூர் சென்றார் சிறிலங்கா அதிபர்

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் பார்வையிடுவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா அமைச்சர்

போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில், எந்தச் சந்தர்ப்பத்திலும் அனைத்துலக தலையீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.