மேலும்

சிறிலங்காவில் 100 பேருக்கு 135.7 தொலைபேசிகள்

Central-Bank-of-Sri-Lankaசிறிலங்காவில் ஒவ்வொரு 100 பேருக்கும் 135.7 தொலைபேசிகள் பயன்பாட்டில் இருப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் 67 ஆவது ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

இதன்படி, ஒவ்வொரு 100 பேருக்கும் 12 தரைவழித் தொலைபேசிகள் பயன்பாட்டின் இருக்கின்றன. கைபேசிகளையும் சேர்த்துக் கொள்ளும் போது, ஒவ்வொரு 100 பேருக்கு 135.7 தொலைபேசிகள் இருக்கின்றன.

அதேவேளை, சிறிலங்காவின் சனத்தொகையில் 23.2 வீதமானோர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இதனிடையே, வங்கிகள் தொடர்பான தகவல்களும் மத்திய வங்கி ஆண்டு அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, சிறிலங்காவில் ஒரு இலட்சம் பேருக்கு 18 என்ற அடிப்படையில், தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.

2984 அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிக் கிளைகளும், 630 அனுமதி பெற்ற சிறப்பு வங்கிக் கிளைகளும் சிறிலங்காவில் இருக்கின்றன.

ஒரு இலட்சம் பேரில், 6,206  பேர் என்ற அடிப்படையில், கடனட்டைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு இலட்சம் பேருக்கு 17 என்ற அடிப்படையில், வங்கிக் கிளைகள் இருக்கின்றன.” என்றும் மத்திய வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *