மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்கா தொடர்பாக நாளை அறிக்கை வெளியிடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஜெனிவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரி்மைகள் பேரவையின் 31ஆவது அமர்வில், சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை உரையாற்றவுள்ளார்.

யோசிதவுக்கு எதிரான மின்னஞ்சல் ஆதாரங்கள் வெளிநாட்டில் இருந்து அழிப்பு

யோசித ராஜபக்சவுக்கு எதிரான நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக கருதப்படும்,மின்னஞ்சல்கள் பலவும் திட்டமிட்டு ஒரு குழுவினராலோ, தனிநபராலோ அழிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழரை பாரபட்சத்துடன் நடத்துகிறது, வாக்குறுதியை மீறுகிறது அரசாங்கம் – சம்பந்தன் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கமும் தமிழர்களைப் பாரபட்சத்துடன் நடத்துவதாக குற்றம்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தகைய நிலை தொடர்ந்தால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.

சிறிலங்காவில் 3 குடிநீர் திட்டங்களுக்கு இந்தியா 400 மில்லியன் டொலர் கடனுதவி

சிறிலங்காவில் மூன்று குடிநீர் விநியோகத் திட்டங்களை மேற்கொள்வதற்கு 400 மில்லியன் டொலர் கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளது.  இதுதொடர்பான உடன்பாடு நேற்று இந்தியாவின் எக்சிம் வங்கிக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குள் ஆட்சி கவிழும் – என்கிறார் பிரசன்ன ரணதுங்க

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் நிச்சயம் கவிழும் என்று தெரிவித்துள்ளார், மகிநத ராஜபக்ச ஆதரவு அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பிரசன்ன ரணதுங்க.

15 மாதங்களாகியும் அதிகாரிகளை விட்டுப்போகாத மகிந்த பக்தி

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 15 மாதங்களாகின்ற நிலையில், கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் வரவேற்புரை நிகழ்த்திய விவசாய அமைச்சின் செயலாளர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச என்று விழித்தது நிகழ்வில் பங்கேற்றவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், விரைவில் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

அரசியலமைப்பு குறித்த மக்கள் கருத்தறியும் குழு சம்பந்தனைச் சந்திக்கிறது

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்தறிய சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட குழு, நாளை மறுநாள் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் சிறப்பு சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.

எட்காவை எதிர்க்கும் மகிந்த அணியை சாடிய இந்தியத் தூதுவர்

இந்தியா- சிறிலங்கா இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு, (எட்கா) சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு வெளியிடுவது குறித்து, இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா ஆச்சரியமும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளார்.

மகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை? – சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் தீர்மானம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, மகிந்த ராஜபக்ச தவறாக விமர்சித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் மத்தியகுழு தீர்மானிக்கும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.