மேலும்

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 68 ஆவது இடம்

Rule of Lawசட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 68 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி-2016 வெளியிடப்பட்டுள்ளது.

113 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் சிறிலங்கா 68 ஆவது இடத்தில் இருக்கிறது.

சாதாரண மக்களின் அனுபவங்கள், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், ஊழல், இலஞ்சம், குற்றம், மற்றும் நீதியைப். பெறுதல் தொடர்பான மக்களின் உணர்வுகளின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி  சட்ட ஆட்சி தொடர்பான இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில், டென்மார்க் முதலிடத்திலும், நோர்வே இரண்டாமிடத்திலும், பின்லாந்து மூன்றாமிடத்திலும், இருக்கின்றன.

அதேவேளை தெற்காசிய நாடுகளில், நேபாளம் 63 ஆவது இடத்திலும், இந்தியா 66 ஆவது இடத்திலும், பங்களாதேஸ் 103ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 106 ஆவது இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் ஊழல்கள் தொடர்பாக 42 வீதமானோர் தண்டிக்கப்படுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *