மகிந்தவுக்கு சந்திரிகா கசப்பு, கணவர் இனிப்பு
கூட்டு எதிரணியின் மே நாள் பேரணி நடைபெற்ற காலி முகத்திடல் பகுதியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான விஜயகுமாரணதுங்கவின் உருவப் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.
கூட்டு எதிரணியின் மே நாள் பேரணி நடைபெற்ற காலி முகத்திடல் பகுதியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான விஜயகுமாரணதுங்கவின் உருவப் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கருப்புக்கொடிகளைப் பறக்க விட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.
நான் ஒருபோதும் நாட்டைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கண்டி-கெடம்பே மைதானத்தில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மேநாள் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
காலிமுகத்திடலில் மகிந்த ராஜபக்ச தனது பலத்தைக் காட்டும் வகையில் நடத்திய மிகப் பிரமாண்டமான மேநாள் பேரணியில் பங்கேற்ற இருண்டு பேர் கடும் வெயில் வெப்பத்தை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து இறந்தனர்.
சிறிலங்கா படையினரை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவத் தளபதி பதவியைவழங்குவதற்கோ , தொழிற்சங்க நடவடிக்கைகளால் அத்தியாவசிய சேவைகள் தடைப்படும் போது, நிலைமையைக் கையாள்வதற்கான குழுவுக்கு பொறுப்பாக நியமிப்பதற்கோ சிறிலங்கா அதிபர் கனவு காணவில்லை என்று அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறை ஆட்சேர்ப்பில் தமிழ்பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேற்றுமுன்தினம் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
முப்படைகள், காவல்துறையை உள்ளடக்கிய வகையில், ஒட்டுமொத்த பாதுகாப்பு விவகாரங்களையும் கவனிக்கும் உயர்நிலைப் பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பாக இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.