மகிந்த அரசு பெற்ற கடன் 9.3 பில்லியன் டொலர்
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பெறப்பட்ட 9.3 பில்லியன் டொலரை கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாக, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
‘மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் .3 பில்லியன் டொலர் கடன்கள் பெறப்பட்டிருந்தன. தற்போதைய அரசாங்கம் 1.15 பில்லியன் டொலர் கடன்களையே பெற்றிருக்கிறது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், ஊழல்கள், டோசடிகள் தொடர்பான விசாரணைகள் அடுத்த மேநாள் கொண்டாட்டங்களுக்கு முன்னர் முடிவடைய வேண்டும்.
இப்போதைய அரசாங்கத்தில் இருந்து கொண்டு ராஜபக்சக்களை பாதுகாப்பவர்கள் பற்றிய பெயர் விபரங்கள் வெளியிடப்படும்.’ என்றும் அவர் தெரிவித்தார்.