மேலும்

முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்

sumanthiranவடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

”தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பைக் கண்டித்து அண்மையில் வடக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

அதுபோல, வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அது ஒரு இனச்சுத்திகரிப்பாகும்.

வடக்கு மாகாணசபை இதனைச் செய்யாது போனால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது.

யாழ்.மாவட்டத்தில் பெரும்பான்மையினரான தமிழர்கள் தவறுகளைப் புறக்கணிக்கும் போது, சிங்களப் பெரும்பான்மையினரின் தவறுகளை அவர்களால் கண்டிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தில் உள்ள வடக்கு மாகாணசபையின் கவனத்துக்கு கொண்டு வருவீர்களா என்று, எழுப்பிய கேள்விக்கு, நான் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் அல்ல. எனது பார்வையையே குறிப்பிட்டேன். அவர்களே அதனைச் செய்ய வேண்டும்” என்று சுமந்திரன் பதிலளித்துள்ளார்.

11 கருத்துகள் “முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்”

 1. S.R.Sivasubramaniam says:

  இதில் என்ன குதர்க்கம் இருக்கிறத?. அவர் சொன்னது சரியானதும் மட்டுமல்ல, கட்டாயம் செய்ய வேண்டியதே.

 2. maanu says:

  S.R. Siva Subramanian sonnathu sarithaan. ithil enna ‘KUTHARKAM’ irukirathu? Otrumaiyaka irukka vendiya iru samokamum, palaiya pakamaikalai maranthu inakkamaaka iruppathe, ipothu thevai.

 3. மனோ says:

  அறிவுக் ◌கொழுந்து சொன்னா அதில் ஏதாவது இருக்கத்தான் செய்யும்? 2 பெரியவங்க தெரிஞ்சவங்க குதர்க்கம் இல்லைங்கிறாங்க. பாக்கெட்டைத் மேடிப் பாருங்க பாஸ் ஏதாவது சில்லறை காரணம் தட்டுப்படலாம்.

  உண்மை நிகழ்வுகளை மூடி மறைக்க றூம் போட்டுச் சிந்திக்கிற கூட்டம் அந்த அளவுக்கு பெரகிடுச்சு பாஸ்!

 4. a voter says:

  சுமந்திரன் சொல்வது குதர்க்கமா இல்லையா என்பதை ஒருபுறம் வைப்போம்.
  தமிழர் தரப்பிலிருந்தே முஸ்லீம் மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டிருக்கையில் அதனை நியாயப்படுத்திக் கொண்டே தமிழர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதில் தார்மீக நியாயம் இருக்கிறதா?

  1. Sie.Kathieravealu says:

   The 5 comments are not justifiable. Ejecting from one portion of the land and ejecting from the entire portion of the land – killing – are not the same.

   Not allowing to live in a particular place and not allowing to live anywhere in the world are two entirely different policies.

   How do you equating these two.

 5. Kaali says:

  இசுலாமியர் அல்லது முசுலீம்கள் ஏனென்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்ற தமிழ் மக்கள், உண்மையிலேயே மிகவும் கைவிடப்படவர்கள் தான்.

  ஆனாலும் சுமந்திரனுக்கு செருப்பு அடி தேவைப்படுகிறது போலும்.

  சுமந்திரனை சேர்ந்த யாரேனும் இந்த செய்தியினை பார்த்தால் அவரிடம் சொல்லு விடுங்கள்.

 6. mylvaganam sooriasegaram says:

  Many people, including myself, have been saying what Sumanthiran is saying now. To say this now in his capacity as an outspoken TNA member of parliament is courageous. I welcome this.

  There cannot be any argument or dispute that what the LTTE did to the Muslims in the NP was nothing but ethnic cleansing. A resolution by the NPC condemning this, an unconditional apology to the Muslin community and swift resettlement of the evicted Muslim families must be undertaken by the NPC speedily along with all other displaced Tamils.

 7. mathi says:

  சுமந்திரன் குடும்பம் கொழும்புக்கு போனதும் இனசுத்திகரிப்பா?

 8. mano says:

  இதில் என்ன குதர்க்கம் இருக்கு என்ற மாற்றுக் கேள்வி மூலம் அறிவார்ந்த வாதத்தை திசை திருப்பாதீர்கள். அக்காலத்தில் யாழ் நகரில் அரச பணியில் இருந்தவன் . அதனால் அங்கு நிலவிய போர்ச் சூழலை நான் தினமும் வாழ்ந்து அனுபவித்தவன்.

  எனக்கு அன்றும் இஸ்லாமியர்கள் மீது பற்றும் பாசமும் வைத்திருப்பவன். யாழ் மட்டும் அல்ல கொழும்பு மற்றும் தென்பகுதி முஸ்லீம்களுடன் பணி நிமிர்த்தமாகவும் நட்போடும் வாழ்ந்தவன்.

  குறித்த வெளியேற்றத்துக்கு நேரடிக் காரணமாக சாவகச் சேரியில் இருந்த முஸ்லீம் தமிழ் வர்த்தகரது நடவடிக்கைகள் சிங்கள இராணுவத்துக்கு ஆதரவாகவும் விமானக் குண்டுத் தாக்குதல் தொடர்பான தகவல்களை வழங்கியதாகவும் இராணு வத்துக்கு கொழும்பிலிருந்து பல பொருட்களை விநியோகித்தார் என அறியப்பட்டது. அதே காலப் பகுதியில் கிழக்கே முஸ்லீம்களின் ஊர்காவல் படையால் தமிழ் மக்களின் படுகொலைகள் நடந்தேறி இருந்தன. இத்தகைய பின்னணியில் யாழ் கோட்டையில் இருந்த சிங்கள இராணுவம் யாழ் கொட்டடிச் சந்தி ஊடாக முஸ்லீம்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஊடாக நகருக்குள் நுழைவதைக் கட்டுப் படுத்துவதில் புலிகள் பல நடைமுறைச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை நிலவியது.
  எனவே முஸ்லீம்களின் வெளியேற்றம் இராணுவ ரீதியாக அவசியமான ஒன்று. ஆனால் அது நிறை வேற்றப்பட்ட விதமும் போதிய அறிவித்தலோ அவகாசமோ முஸ்லீம் மக்களின் நியாயமான தேவைகளையோ கவனத்தில் எடுக்காமல் வெளியேற்றப் பட்டதை எக்காலத்திலும் நான் நியாயப் படுத்தமாட்டேன்.

  இதே விதமாக யாரும் சிங்கள இராணுவத்தால் வெளியேற்றப் பட்ட தமிழ் முஸ்லீம் மக்கள் பற்றி கருத்துக் கூற வேண்டிய தார்மீகம் சுமந்திரன் போன்ற மேதாவிகளுக்கு ஏன் வருவதில்லை?

  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் கக்கீம் மீள் குடியமைப்பு அமைச்சரான வேளையிலும் அவர் முஸ்லிம் மக்களை ஏன் மீள் குடியமர்த்த தவறினார்? இவர்களுக்கு தமிழ் முஸ்லீம் மக்களை பிரித்து அரசியல் செய்வது அவசியமாக தெரிகிறது.

  இறுதியாக இங்கிலாந்தின் இராணுவ அமைச்சராக உலகப் பகழ் பெற்ற சேர். வின்சன்ட் சேர்ச்சில் போரிலும் காதலிலும் எதுவுமே சரிதான் “Anything is Fair in Love and War” என்றார். எல்லாம் தெரிந்த சுமந்திரனுக்கு இதுவும் தெரியும் எனவே நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *