13 ஆயிரம் கொள்கலன்கள் தேக்கம்- கொழும்பு துறைமுகத்தில் நெருக்கடி
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 13 ஆயிரம் கொள்கலன்களை அகற்றுவதற்கு உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்ட போதும், பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 13 ஆயிரம் கொள்கலன்களை அகற்றுவதற்கு உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்ட போதும், பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.
சிறிலங்காவில், கடல்சார் பாதுகாப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் இந்தியப் பெருங்கடலில் சீனாவின் விரிவடையும் செல்வாக்கை எதிர்கொள்வதில் வொசிங்டன் கவனம் செலுத்தும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக முன்மொழியப்பட்டுள்ள, எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.
சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட 300 மெட்ரிக் தொன் அவசர நிவாரணப் பொருட்கள் நேற்று சிறிலங்கா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சற்புரா கொழும்புத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவின் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அதிகளவு சொத்துக்களைக் கொண்டிருப்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தரமற்ற தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாடுகளின் 700இற்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்து சென்றிருப்பதாக, சிறிலங்கா கடற்படையின் வட பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியகத்தைச் சேர்ந்த குழுவொன்று இந்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவில் முன்னர் சுகாதார மற்றும் கடற்றொழில் அமைச்சர் பதவிகளை வகித்த, ராஜித சேனாரத்னவை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வழக்கைப் பார்வையிட பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பட்றிக் நீதிமன்றம் சென்றதாக வெளியான செய்திகளை சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதரகம் நிராகரித்துள்ளது.