கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இன்று மாலை திடீர் பயணமாக கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பில் சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் கலந்து கொண்டார்.
இதன்போது, அவரை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய பிரதமரின் சார்பில் நேரில் அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்டு, வரும் 29ஆம் நாள், கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
On first paragraph, there was a mistake Srisena as Sril kankan president
நன்றி