மேலும்

சிறிங்காவில் ஜூன் மாதம் பணவீக்கம் 6.8 வீதமாக அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும்  பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 6.8 வீதமாக அதிகரித்துள்ளது.

மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவரங்கள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு மே மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும்  பணவீக்கம்,  5.5 வீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம், 1.3 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

உணவுப் பணவீக்கம், மே மாதத்தில் 0.9 வீதமாகப் பதிவான நிலையில், ஜூன் மாதத்தில் 3.6 வீதமாக உயர்ந்துள்ளது.

உணவல்லாத பொருட்களின் பணவீக்கம், மே மாதத்தில் 7வீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 8.4 வீதமாக அதிகரித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *