மேலும்

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம்- 4 திருத்தங்கள் பரிந்துரை

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணாக இருப்பதாக, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தில் கூறப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்த சட்டமூலம், அரசியலமைப்பின் 121(1) பிரிவின் கீழ் உயர்நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டிருந்தது.

குழு நிலை விவாதத்தின் போது, தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள உயர்நீதிமன்றம், அதன் பின்னர், இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும், கூறியுள்ளது.

உயர்நீதிமன்றம்  பரிந்துரைத்துள்ள நான்கு திருத்தங்களில்  மூன்று திருத்தங்கள் ஏற்கனவே, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலால் மேற்கொள்ளப்பட்டு விட்டன.

இந்தத் திருத்தங்களில், நீண்ட கால தடுப்புக்காவல் தொடர்பான விதிகளில் மாற்றங்களைச் செய்வதும், நீதித்துறை மேற்பார்வை அதிகாரங்களுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதிலாக உயர்நீதிமன்றத்தை நியமிப்பதும் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *