மேலும்

ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை

பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூதூர்- மட்டக்களப்பு வீதி புனரமைப்புப் பணிகளை நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு, பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களை நாம் பயன்படுத்துவோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு விமானங்கள் இயங்கத் தொடங்கி விடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கருத்து “ஆண்டு இறுதிக்குள் பலாலி- இந்தியா இடையே விமான சேவை”

  1. Arinesaratnam Gowrikanthan says:

    “ தீவிரவாதத்தையும்”, “பயங்கரவாதத்தையும்” ஒடுக்குவதில் உலகளாவிய முன்நிலை வகிக்கத் துடிக்கும் இந்திய பாதுகாப்புப் பிரிவும், இந்தியாவின் மொத்த மூலதனத்தின் 60% தத்தை தம்வசம் வைத்திருக்கும் 3% மான (இந்திய ஜ்னத்தொகையில்) இந்திய முதலாளிகளும் சுலபமாக பயணம் செய்ய வாய்ப்புகள் உருவாகப் போகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *