மேலும்

கரன்னகொட, றொஷானுக்கும் பொன்சேகாவுக்கு இணையான பதவி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த போது, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொடவும், சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்த எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இணையாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதன்படி சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட,  அட்மிரல் ஒவ் தி பிளீட் (Admiral of the Fleet) ஆகவும்,  முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலக மார்ஷல் ஒவ் தி எயர்போர்ஸ் (Marshal of the Air Force) ஆகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவர்களுக்கான பதவி உயர்வுகளை அளித்துள்ளார்.

இதன் மூலம், சரத் பொன்சேகாவின் இராணுவப் பதவி நிலையான பீல்ட் மார்ஷலுக்கு இணையான பதவி நிலையை இவர்கள் இருவரும் பெற்றுள்ளனர்.

தற்போது பதவி உயர்த்தப்பட்டுள்ள வசந்த கரன்னகொட, கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

அதேவேளை, வசந்த கரன்னகொடவும், றொஷான் குணதிலகவும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *