மேலும்

நீர்கொழும்பு தேவாலயம் மீளத் திறப்பு – வரலாற்று சின்னமாக இரத்தக்கறையுடன் அந்தோனியார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம்- மூன்று மாதங்களுக்குப் பின்னர் நேற்று மீளத் திறக்கப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலின் அடையாளச் சின்னமாக விளங்கும், இரத்தக்கறை படிந்த அந்தோனியார் சிலை கண்ணாடிப் பெட்டி ஒன்றுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

அதனை பார்ப்பதற்கும் ஓளிப்படம் எடுப்பதற்கும் பெருமளவானோர் ஆர்வம் காட்டினர்.

அதேவேளை, குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 114 பேரின் சடலங்களும் புதைக்கப்பட்ட புதிய கல்லறைத் தோட்டமும் நேற்று திறந்து விடப்பட்டு, வழிபாடுகளுக்கு அனுமதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *