மேலும்

மாதம்: July 2019

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அதிநவீன கண்காணிப்பு விமானத்தினால் சர்ச்சை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ள சிறப்புத் தேவைகளுக்கான அதிநவீன விமானம் தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

சோபாவில் கையெழுத்திடாது சிறிலங்கா அரசாங்கம் – ஐதேகவும் வாக்குறுதி

அமெரிக்க அரசாங்கத்துடன் சிறிலங்கா அரசாங்கம் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷ விதானகே நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார்.

ரணிலின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர்பார்க்கும் அமெரிக்கா

மிலேனியம் சவால் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக பணிப்பாளர்,  சீன் கெய்ன் குரொஸ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு, ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர்கள் யாழ்ப்பாணம், மயிலிட்டிப் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தியது குறித்து தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பலாலியில் இருந்து விமான சேவை – புறக்கணிக்கப்படும் தமிழக விமான நிலையங்கள்

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையத்தில் இருந்து, முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளில், தமிழ்நாட்டில் உள்ள எந்த விமான நிலையமும் இடம்பெறவில்லை எனத் தெரியவருகிறது.

சிங்கள அரசை உருவாக்க உதவுமாறு பிக்குகளுக்கு அறைகூவல்

சிங்கள அரசை உருவாக்குவதற்கு பௌத்த பிக்குகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

நெதர்லாந்தில் சிறிலங்காவின் இரண்டு தூதுவர்கள்

நெதர்லாந்தில் தற்போது சிறிலங்காவின் இரண்டு தூதுவர்கள் இருப்பதாகவும், ஒருவர் அதிகாரபூர்வ வதிவிடத்திலும் மற்றொருவர் விடுதியிலும் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் – முன்னாள் புலனாய்வு அதிகாரி கைது

ரிவிர மற்றும் திவயின சிங்கள இதழ்களின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரியான கோப்ரல் லலித் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கில் குண்டுப் புரளியால் பதற்றம்

குண்டுப் புரளி தொடர்பாக பரவும் வதந்திகள் குறித்து தென் மாகாணத்தில் உள்ள மக்களை அச்சமடைய வேண்டாம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

சீனா வழங்கிய போர்க்கப்பல் சிறிலங்கா வந்தது

சிறிலங்கா கடற்படைக்கு சீனா வழங்கிய போர்க்கப்பல், இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.