தெற்கில் குண்டுப் புரளியால் பதற்றம்
குண்டுப் புரளி தொடர்பாக பரவும் வதந்திகள் குறித்து தென் மாகாணத்தில் உள்ள மக்களை அச்சமடைய வேண்டாம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
குண்டு மிரட்டல் குறித்து சில சமூக ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களினால், தென் மாகாண மக்கள் பீதியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், பாதுகாப்புப் படைகள் மற்றும் காவல்துறையினரின் முழுக் கட்டுப்பாட்டில் நிலைமைகள் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், விழிப்பு நிலையில் இருப்பதாகவும், குண்டுப் புரளி தொடர்பான தகவல்களை தொடர்ந்து பகுப்பாய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.