மேலும்

மாதம்: October 2018

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை கலைகிறது

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.

மகிந்தவின் பதவியேற்பில் கீழே விழுந்தார் சிறிசேன

சிறிலங்கா பிரதமராக மகிந்த ராஜபக்ச பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், அண்மையில் பிரதமரின் செயலராக நியமிக்கப்பட்ட சிறிசேன அமரசேகர நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

விரைவில் மாகாணசபைத் தேர்தல் – சிறிலங்கா அதிபர்

புதிய அரசாங்கம் கூடிய விரைவில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்கும் என்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவையில் நிதி, பொருளாதார விவகாரங்களை வசப்படுத்தினார் மகிந்த

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு சிறிலங்கா அதிபர் செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.

சிறிலங்காவில் என்ன நடக்கிறது – என்ன சொல்கிறார்கள்? – நடப்புகளின் சங்கமம்

சிறிலங்காவுக்கான அமெரிக்கா மற்றும் ஐ.நாவின் தூதுவர்கள் சபாநாயகர் கரு ஜெயசூரியவைச் சந்தித்து அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

சிறிலங்காவை உன்னிப்பாக அவதானிக்கிறது சீனா

சிறிலங்காவின் நிலவரங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக,  சீனா தெரிவித்துள்ளது.

ரணிலுக்கு சீனா அளித்துள்ள உத்தரவாதம்

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடிகளில், தாம் தலையீடு செய்யமாட்டோம் என்று சீனா தமக்கு உத்தரவாதம் அளித்துள்ளது என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மகிந்த பக்கம் ஓடியவர்கள் மீண்டும் ரணில் பக்கம் பாய்ந்தனர்

மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மீண்டும், ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் திரும்பி வந்துள்ளனர்.

ஆட்சிக் கவிழ்ப்பும் பின்னணியும்

ஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை முன்னிரவில் நடந்தேறியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவை திடீரெனப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த திடீர் நடவடிக்கை, இலங்கையை மாத்திரமன்றி உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் நெருக்கடிக்கு சீனாவே காரணம் – ஐதேக குற்றச்சாட்டு

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து தாவுபவர்களுக்கு நிதியை வழங்கி, தற்போதைய அரசியலமைப்பு நெருக்கடிக்கு சீன அரசாங்கமே காரணமாக இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.