மேலும்

மாதம்: October 2018

பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் – இன்று அமைச்சரவையில்

பலாலி விமான நிலையத்தை, சிறிலங்கா விமானப்படையும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலர் விதானகமகே தெரிவித்துள்ளார்.

மன்னாரில் 30 வீதம் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில் 148 எலும்புக்கூடுகள்

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் 30 வீதமான பகுதியே தோண்டப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து 148 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த நோய்

இலங்கையர்களில் நான்கு பேருக்கு ஒருவர், உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

போதைப்பொருளை தடுக்கும் அதிகாரத்தைக் கோரும் சிறிலங்கா இராணுவம்

போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான அதிகாரத்தை சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் சிறிலங்கா பயணம்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் லெப்.ஜெனரல் இக்ரம் உல் ஹக் தலைமையிலான உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்கா வரவுள்ளது.

நோர்வே செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளை மறுநாள் நோர்வேக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 05ஆம் நாள் வரை ஒஸ்லோவில் தங்கியிருக்கும் சிறிலங்கா பிரதமர், நோர்வே அரச அதிகாரிகளுடனும், தொழில்நுட்ப நிபுணர்களுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை கொல்லச் சதி என்கிறார் கம்மன்பில

பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி

உலகிலேயே மிகவும் வலிமைமிக்க அரசியல் சக்தி எது என்ற கேள்வியுடன் சர்வதேச உறவுகள் குறித்து தலைசிறந்த மேலைத்தேய ஆய்வாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்டீபன் வோல்ற் என்பவர் 2011ஆண்டில் Foreign Policy என்ற சஞ்சிகையில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.

கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய கடற்படையின் விமானந்தாங்கி, நாசகாரி போர்க்கப்பல்கள்

ஜப்பானிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று, கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

நாலக சில்வாவின் பணியகத்துக்கு முத்திரை – இரு மடி கணினிகளும் விசாரணையில்

கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் பணியகம், முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.