பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை கொல்லச் சதி என்கிறார் கம்மன்பில
பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று தீட்டப்பட்டுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“சிறிலங்கா அதிபர், முன்னாள் அதிபர் உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வாவை, கொலை செய்வதே, இந்தச் சதித் திட்டத்தின் சூத்திரதாரிகளுக்கு இப்போது உள்ள சிறந்த வாய்ப்பாகும்.
அதன் மூலமே, அவரிடம் உள்ள இரகசியங்களை மௌனமாக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.