இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களை விரைவுபடுத்த சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இணக்கம்
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சிறிலங்காவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான சிறிலங்காவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
அரசியலை விட்டு வெளியேறி, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் ஒரு மக்கள் அமைப்புடன் இணைந்து கொள்வதையே தாம் விரும்புவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தமக்கு வாக்குமூலம் அளிக்கத் தவறியுள்ளார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப் போவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் வழக்கில், இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சிறிலங்கா இராணுவத்தின் வரலாற்றில் முதல் முறையாக இரட்டைச் சகோதரர்கள் ஒரே நாளில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் ஆகியோரை உள்ளடக்கிய சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இன்று இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.
மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தியா செல்கிறார்.
தனது அனுபவத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ஏழு பேரையையும் விடுதலை செய்வதற்கு மாநில ஆளுனருக்கு, தமிழ்நாடு அமைச்சரவை நேற்று பரிந்துரை செய்துள்ளது.