மேலும்

நாள்: 18th September 2018

அதிருப்தி வெளியிட்ட சீனா – பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த சிறிலங்கா அதிபர்

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

பலாலியை அபிவிருத்தி செய்யும் பணி இந்தியாவுக்கு வழங்கப்படாது – சிறிலங்கா அரசு கைவிரிப்பு

தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை சிறிலங்கா விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.

சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு பெரும் சரிவு – டொலரின் பெறுமதி ரூபா 166.64 

தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்து வந்த, அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு, இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவும் மாற்றங்களும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்கள், 48 மணித்தியாலங்களுக்குள் நீதிவான் முன்னிலையில் முன்னிறுத்தப்படுவதுடன்,  ஆகக்கூடியது 8 வாரங்கள் மட்டுமே இவர்களைத் தடுப்பில் வைத்திருக்கலாம் என்பதை வலியுறுத்தும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா  அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

வெலிக்கடைக்கும் பரவியது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக  சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

போர்க்குற்றம்சாட்டப்பட்ட இருதரப்புக்கும் பொதுமன்னிப்பு – சம்பிக்க ரணவக்க யோசனை

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து, அனைத்து சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

3 மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்ட அறிக்கையைத் தயாரிக்கிறது இந்தியா

பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது.

வியன்னாவுக்கான தூதுவரை திருப்பி அழைத்தது ஏன்? – சிறிலங்கா அதிபர் விளக்கம்

ஒஸ்ரியாவுக்கான சிறிலங்கா தூதுவர் மற்றும் அதிகாரிகளை திருப்பி அழைக்க உத்தரவிட்டமைக்கான காரணத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.