மேலும்

நாள்: 12th September 2018

இந்தியப் பிரதமர் மோடியுடன் மகிந்த சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இன்று மாலை புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தியாவுடன் ஒட்டிக் கொள்ளும் ஆர்வத்தில் மகிந்த – ‘தி ஹிந்து’ செவ்வியில் ஒப்புக் கொண்டார்

2019ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சிக்கு வருவது 100 வீதம் உறுதி என்றும், தாம் பதவிக்கு வந்ததும், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட இந்தியாவுடனான எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான பொறிமுறை ஒன்று முன்மொழியப்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா நாடு கடத்திய 9 இலங்கையர்களும் சிஐடியினரால் கைது

அவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று சிறப்பு விமானம் மூலம் நாடுகடத்தப்பட்ட ஒன்பது இலங்கையர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள, பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

றியூனியன் தீவுக்கு படகில் செல்ல முயன்ற 90 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது

நீர்கொழும்புக்கு அப்பாலுள்ள கடலில் படகு ஒன்றில் கைது செய்யப்பட்டவர்கள் றியூனியன் தீவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் லெப்.கொமாண்டர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

அமல் கருணாசேகர கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கோத்தாவிடம் இன்று விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

இடி அமீன் போல இருக்கிறார் – சிறிலங்கா இராணுவத் தளபதியை தாக்கும் பொன்சேகா

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, இடி அமீன் போலத் தோற்றமளிக்கிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.